Hot Posts

6/recent/ticker-posts

கால்நடை

 இலங்கையில் மொத்தமாக உள்ள 1.6 மில்லியன் கறவை மாடுகளில் 405,001 மாடுகள் வடக்கிலும்; 542,805 மாடுகள் கிழக்கிலும் உள்ளன. நாட்டில் மொத்தமாக உள்ள 476,050 எருமை மாடுகளில் 24,164 எருமைகள் வடக்கிலும்; 234,782 எருமைகள் கிழக்கிலும் உள்ளன (கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள புள்ளிவிபரம் – 2022).

இலங்கையில் கால்நடைகளின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்பத்தையும் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு இந்திய அரசு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது

276A5256

கடந்த வருடம் முதல் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் கால்நடை அபிவிருத்தித் துறையை மீளக்கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் பூரண ஆதரவை வழங்குவதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் பல தடவைகள் கமத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர அவர்களுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன்கௌரவ ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும்இந்த நாட்டில் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கு

இந்திய அரசாங்கத்தின் ஆதரவை வழங்க தனது இணக்கத்தை தெரிவித்தார்.

இந்த ஏற்பாட்டின் கீழ்இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்று (19ஆம் திகதி) வரை நடைபெற்ற சர்வதேச தினை ஆண்டு தொடர்பான முதலாவது உலகளாவிய மாநாட்டில் இலங்கை சார்பாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.

அங்குஇந்தியாவின் முன்னணி பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்பு நிறுவனமான மதர் டெய்ரியின் தொழிற்சாலையை அமைச்சர் நேற்று பார்வையிட்டார்.

இத்தொழிற்சாலை தொடர்பாக நாளொன்றுக்கு சுமார் 50 இலட்சம் லீற்றர் பால், பால் மற்றும் பால் பொருட்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

இந்தியாவில் பொதுமக்களுக்கு புதிய பசும்பாலை வழங்கசைக்கிள் அடிப்படையிலான மொபைல் வேன்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர். மேலும்நிறுவனம் 300 இற்கும் அதிகமான பால் பொருட்களை நுகர்வோருக்காக உற்பத்தி செய்கின்றது.

இந்த தொழிற்சாலை தேவையான பாலை பெறுவதற்காக கால்நடை வளர்ப்பு பண்ணைகளையும் நடத்துகின்றது.

இந்திய கால்நடை பண்ணைகளில் தற்போது பயன்படுத்தப்படும் உயர் தொழில் நுட்பம்அதிக பால் உற்பத்தி செய்யக் கூடிய கால்நடை இனங்கள் இல்லாமை போன்ற காரணங்களால்உயர்தர பசுக்களை எமதுநாட்டுக்கு வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இத்தொழிற்சாலையை அவதானிக்கும் விஜயத்தில் கலந்துகொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் இலங்கையில் பால் உற்பத்தித் தொழில் வீழ்ச்சியடைந்ததன் காரணமாகஎமது நாட்டில் பால் மற்றும் பால் உற்பத்தித் தொழில் சுமார் 19 வீதத்தால் குறைந்துள்ளது. குறிப்பாக 2021 பெரும்போகத்தில் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதால் கால்நடை தீவன உற்பத்தி குறைந்துள்ளது.

குறிப்பாக, 2021 பெரும்போகத்தில் நாட்டின் வருடாந்த சோள அறுவடை 90,000 மெற்றிக் டொன்களாக குறைந்துள்ளது.

இதனால் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு சோளத்தை இறக்குமதி செய்ய தேவையான டொலர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 180,000 மெற்றிக் டொன் சோளம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. மேலும்இந்த போகத்தில் 60,000 ஹெக்டேயரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகஇந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன்நாட்டின் கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் மற்றும் அதிக பால் உற்பத்தி செய்யக் கூடிய பசுக்களையும் பெற்றுக் கொள்ள இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன்இந்திய-இலங்கை ஒத்துழைப்பின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு சொந்தமான பல கால்நடை பண்ணைகளை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

276A5281  276A5286

Post a Comment

0 Comments