Hot Posts

6/recent/ticker-posts

அரசியல் ஆய்வு கட்டுரை

 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம்

இலங்கையின் சனாதிபதி

குடியரசின் சனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக, 6 வருடப் பதவிக்காலத்துக்கு மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படுகிறார். இவர் ஒரே நேரத்தில் நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும் செயல்படுகிறார். சனாதிபதி அரசியல் யாப்பினதும், ஏனைய சட்டங்களினதும் அமைவாக, தமது கடமைகளை நிறைவேற்றுவதில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராவார். சனாதிபதி, நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சரவை ஒன்றை நியமித்து, அதற்குத் தலைமை தாங்குவார். குடியரசுத் தலைவர் அடுத்த நிலையிலுள்ளவர் பிரதம மந்திரியாவார்.

சனாதிபதி, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் நிறைவேற்றிய குற்றப்பிரேரணை, உயர் நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கபட்டு அங்கீகரிக்கபட்டு, இது மீண்டும் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்.


நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்ட வாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யபடுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கபடுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.

நாடாளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களையும் ஆக்குகின்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, பொதுநலவாய நாடுகளின் உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.

Post a Comment

0 Comments