Pegasus Reef ஹோட்டலில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ஹோட்டலின் வருடாந்த கேக் கலவையிடும் விழாவின் மூலம் அவர்களது பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்வுகள் வேடிக்கை மற்றும் குதூகலத்துடன் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வானது, பண்டிகை விடுமுறையின் ஆரம்பத்தைக் குறிப்பதோடு, ஹோட்டலின் அழகான கடற்கரையோரத்தில் இதனைக் கொண்டாட பல்வேறு இடங்களிலிருந்தும் விருந்தினர்கள் வந்திருந்தனர்.
சமையல்கலை நிபுணர்கள் கேக் கலவைக்கான பொருட்களைக் கொண்டு வந்தபோது, பாரம்பரிய ட்ரம் ஒலி எழுப்பப்பட்டது. அது காற்றில் பரவி அங்கு பண்டிகைக்கான மனநிலையை உருவாக்கியது. வாசனைப் பொருட்கள், பழங்கள், நட்ஸ்கள் ஆகியவற்றைக் கலப்பதில் விருந்தினர்களும் இதன்போது கலந்து கொண்டனர். இது அதிர்ஷ்டத்தையும் விடுமுறையின் மகிழ்ச்சியையும் தரும் என நம்பப்படுகிறது. அத்தோடு, காற்றலை முழுவதும் மகிழ்ச்சியான உரையாடல்களால் நிரம்பியிருந்ததோடு, அனைவரும் சுவையான சிற்றுண்டி வகைகளை உண்டு மகிழ்ந்தனர். குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக் காலத்தை ஆரம்பிக்க இது சிறந்த வழிமுறையாகும்.
Pegasus Reef ஹோட்டலின் பொது முகாமையாளர் ரேணுக கொஸ்வத்த "A Tropical Christmas at Pegasus" எனும் இந்த வருடத்திற்கான எண்ணக்கருவை இங்கு அறிவித்தார். அவர் இங்கு தெரிவிக்கையில், "விடுமுறை கொண்டாட்டங்களை ஆரம்பிப்பதில் நாம் மிக மகிழ்ச்சியடைகிறோம். கிறிஸ்மஸின் மகிழ்ச்சியை நாம் கொண்டாடுவதன் மூலம், இந்த விழா மக்களை ஒன்றிணைக்கிறது. இந்த டிசம்பரில் Pegasus Reef ஹோட்டலில் ஒரு மாயாஜால கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அனுபவிக்க எம்முடன் இணையுங்கள்," என்றார்.
இங்கு மேலும் மகிழ்ச்சியைக் கூட்டும் வகையில், ஒரு பெரிய திரையில் நத்தார் தாத்தா தோன்றி, கிறிஸ்மஸ் கேக்கிற்கான தனது ஓர்டர் முடிந்ததா என விளையாட்டாக சரிபார்த்தார். இது எதிர்வரும் பண்டிகையில் மேலும் ஆச்சரியங்கள் உள்ளமையை சுட்டிக்காட்டியது. இவ்விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் இசையுடன் கூடிய இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
கேக் கலவையிடும் இந்த நிகழ்வானது வெறுமனே ஒரு ஆரம்பமாகும்! ஹோட்டலின் முக்கிய உணவகங்களில் ஒன்றான ரசகேத, கிறிஸ்மஸ் நாள் வரை தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வெவ்வேறு கருப்பொருட்களில் இரவு விருந்துகளை வழங்கவுள்ளது. இந்த இரவு விருந்தில் வட இந்தியா, இலங்கை உணவுகள் மற்றும் BBQ நைட் என பல்வேறு சுவையான உணவுகளும் இடம்பெறவுள்ளன.
விடுமுறையின் கொண்டாட்டம் இத்துடன் நிறைவடையாது! Pegasus Reef ஹோட்டலின் புகழ்பெற்ற கடல் உணவுகளைக் கொண்ட உணவகமான The Fishery, கிறிஸ்மஸ் எண்ணக்கருவுடனான நிகழ்வுகளை முன்னெடுக்கும். அத்துடன், இது தொடர்பான தொடர்ச்சியான தகவல்களை பெற ஹோட்டலின் சமூக ஊடக பக்கங்களுடன் இணைந்திருப்பதன் மூலம், பண்டிகை கொண்டாட்ட நிகழ்வுகளைத் தவறவிடாதீர்கள்! Pegasus Reef ஹோட்டலின் கிறிஸ்மஸின் Tropical Christmas மந்திரத்தை தவறவிடாதீர்கள்! எதிர்வரவுள்ள அனைத்து கொண்டாட்டங்கள் தொடர்பிலும் அறிய facebook.com/Pegasusreefwattala அல்லது www.instagram.com/pegasusreef_wattala சமூக ஊடக பக்கங்களை பின்தொடருங்கள். மேலதிக தகவலுக்கு www.pegasusreefhotel.com எனும் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.
0 Comments