சிறுவர் இல்லத்தின் காவலாளியை கொலை செய்த சிறுவர்கள்!


சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெபிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சிறுவர் இல்லத்தில் நீதிமன்றங்களால் அனுப்பி வைக்கப்பட்ட12 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்  நிர்வாக விவகாரங்களுக்காக முகாமையாளர் ஒருவரும் மற்றும் பிரதான கண்காணிப்பாளரும் உள்ளனர், மேலும் சிக்கு ஹேவகே பியதாச டயஸ் என்ற நபர் காவலாளியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று (15) அதிகாலை அவர் சிறுவர் இல்லத்தில் இல்லாத அதன் பொறுப்பாளர்களும் சிறுவர்களும் அவ்விடத்தைச் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, கொலை செய்யப்பட்ட காவலாளியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு முன்னர் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி இன்று காலை திருடப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியை திருடிய நபர் அந்தந்த சிறுவர் இல்லத்திற்குள் ஓடுவதைக் கண்ட முச்சக்கரவண்டியின் உரிமையாளர் காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவர் இல்ல கண்காணிப்பாளரிடம் பொலிஸ் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இவ்வாறான பின்னணியில் சிறுவர் இல்ல கிணற்றுக்கு அருகில் நேற்று காலை காவலாளியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுவர் இல்லத்தில் உள்ள 17 வயதுடைய பிரதான சந்தேகநபரையும் 16 வயது சிறுவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஏனைய சிறுவர்களிடம் இருந்து பிரித்து தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபர், தனது அறையின் ஜன்னலை கழற்றி கொண்டு வெளியே வந்து பாதுகாவலரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையை வெளியில் இருந்து வந்து யாரோ செய்திருக்கலாம் என பொலிசாரை நம்ப வைக்கும் நோக்கில் தான் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருடப்பட்ட முச்சக்கரவண்டியில் சடலத்தை பெல்லன்வில ஏரியில் வீசுவதே சந்தேகத்திற்குரிய சிறுவர்களின் நோக்கமாகும்.

முச்சக்கரவண்டியின் உரிமையாளரின் வருகையால் திருட்டு முயற்சி தோல்வியடைந்ததையடுத்து சந்தேகநபர்கள் சடலத்தை சிறுவர் இல்ல கிணற்றுக்கு அருகில் வைத்துவிட்டு மீண்டும் தமது அறைகளுக்கு வந்து உறங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுவனுக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

80 வயதுடைய கொலை செய்யப்பட்ட சிக்கு ஹெவெகே பியதாச டயஸ் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நுகேகொட மேலதிக நீதவான் சஞ்சய் டி சில்வா தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments